கருணாநிதி மறைவு.. அஞ்சலி செலுத்த நாளை மோடி, ராகுல், தலைவர்கள் வருகை
பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் நாளை சென்னை வரவுள்ளனர்.
சென்னை: மறைந்த கருணாநிதியின் உடலுக்கு, நேரில் அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நாளை சென்னை வரவிருக்கிறார்.
கருணாநிதியின் மறைவினை அடுத்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் நாளை சென்னை வர உள்ளனர். பிரதமர் மோடி இன்றே மருத்துவமனை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கருணாநிதி மறைந்ததால், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த நாளை பிரதமர் மோடி வர உள்ளார்.

அதேபோல காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஏற்கனவே கருணாநிதியை மருத்துவமனையில் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றார். கருணாநிதியின் மேல் அதிக பிரியமும் மரியாதையும் வைத்திருப்பவர் ராகுல் காந்தி. எனவே நாளை ராகுல்காந்தி சென்னை வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வர உள்ளார். அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் நாளை சென்னை வர உள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உள்ளிட்ட பல்வேறு மாநில தலைவர்களும் நாளை கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்திய அரசியல் தலைவர்கள் சென்னை வர உள்ளதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகினற்ன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications