அன்புமணியை பாராட்டினால்… ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று கூப்பிடுவோமா என்ன… பாமக பாலு பொளேர்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசை பாராட்டி பேசியதால் நடிகர் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று கூப்பிட மாட்டோம் என்று பாமக வக்கீல் பாலு கூறியுள்ளார்.
சென்னை: புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே பேசிய ரஜினி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசை பாராட்டி பேசினார். அவர் அப்படி பேசியதால் பாமகவினர் யாரும் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைத்துவிட மாட்டோம் என்று பாமக வக்கீல் பாலு கூறியுள்ளார்.
கடந்த 15ம் தேதி ரசிகர்களுடம் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கி 19ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது.
இதில் கடைசி தினத்தன்று ரஜினிகாந்த் அரசியல் பேச்சுக்களை அள்ளிவிட்டார். தமிழகத்தில், மு.க. ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோர் அரசியல் இருக்கின்றனர் என்றாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறினார்.

இனிப்பு சாயம்
ரஜினியின் இந்தப் பேச்சை பாமக வக்கீல் பாலு கடுமையாக சாடியிருக்கிறார். ரஜினிகாந்த் சுயநலத்திற்காக இனிப்பு பூசி பேசுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

சூப்பர் ஸ்டார்
மேலும், அன்புமணி ராமதாசை புகழ்ந்து பேசிவிட்டதால், பாமகவினர் யாரும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினியை அழைத்துவிட மாட்டார்கள் என்றும் பாலு கூறியுள்ளார். ரஜினியின் ராஜதந்திர அரசியல் ஒரு போதும் தமிழகத்தில் எடுபடாது என்றும் அவர் சாடியுள்ளார்.

2 பேரும் ஒன்னா
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், அன்புமணியும் ஒன்றா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக முடியாதது போன்றே, திருமாவளவன், சீமான் ஆகியோரும் ஒன்றில்லை திட்டவட்டமாக பாலு கூறியுள்ளார்.

பாசாங்கு
ரஜினியின் இந்தப் பேச்சுக்கள் எல்லாமே பாசாங்குத்தனமானது என்றும், இவற்றை நம்பத் தமிழக மக்கள் தயாராக இல்லை என்றும் பாலு கூறியுள்ளார். ரஜினியை நடிகராக மட்டுமே பார்க்கும் நாங்கள் அரசியல் தலைவராக பார்க்க முடியாது என்று பாலு தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications