For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஷ்டமி, நவமி.. பிரசாரத்திற்குப் போகாத சுதா..!

|

சிதம்பரம்: சிதம்பரம் தனித் தொகுதியில் திடீர் பாமக வேட்பாளராக உருவெடுத்துள்ள சுதா தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்காமல் இருக்கிறார்.

காரணம் கேட்டால், அஷடமி, நவமி வந்துருச்சே.. எப்படி இப்பப் போய் ஆரம்பிப்பது என்று காரணம் சொல்கிறதாம் சுதா தரப்பு.

ஏற்கனவே ஏகப்பட்ட பஞ்சாயத்து, பிரசாரத்திற்கு வேறு நாட்கள் குறைவாக உள்ளது. இந்த லட்சணத்தில் இது வேறயா என்று பாமகவினர் தலையில் அடித்துக் கொள்கிறார்களாம்.

சிதம்பரம் கதை

சிதம்பரம் கதை

சிதம்பரத்தில் முதலில் அறிவிக்கப்பட்ட பாமக வேட்பாளரை மாற்றி விட்டு திடீரென காங்கிரஸிலிருந்து வந்தவரான மணிரத்தினத்தை வேட்பாளராக அறிவித்தது பாமக.

வேட்பு மனு தள்ளுபடி

வேட்பு மனு தள்ளுபடி

ஆனால் மணிரத்தினத்திற்கு நேரம் சரியில்லையோ என்னவோ, அவரது வேட்புமனுவை அதிகாரிகள் சரியாக இல்லை என்று கூறி தள்ளுபடி செய்து விட்டனர்.

நல்ல வேளை மனைவிக்கு கிடைத்ததே

நல்ல வேளை மனைவிக்கு கிடைத்ததே

அதேசமயம், மணிரத்தினத்தின் மனைவி சுதாவின் மாற்று வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதையடுத்து அவரையே வேட்பாளராக்கி விட்டது பாமக.

குரு வந்தார்.. சுதா வரலையே...

குரு வந்தார்.. சுதா வரலையே...

இதையடுத்து காட்டுமன்னார் கோவிலில் பிரசாரப் பொதுக் கூட்டத்தைக் கூட்டியது பாமக. காடுவெட்டி குருதான் சீப் கெஸ்ட்.. ஆனால் வேட்பாளர் சுதா வரவில்லை. மாறாக மணிரத்தினம் வந்து உட்கார்ந்திருந்தார்.

அஷ்டமி நவமிக்கு எப்படி

அஷ்டமி நவமிக்கு எப்படி

ஏன் வேட்பாளர் வரவில்லை என்று மணிரத்தினத்திடம் பாமகவினர் கேட்டபோது அஷ்டமி, நவமி என்பதால் வரவில்லை என்று கூறினாராம்.

அது சரி....!

English summary
PMK's Chidambaram missed her first campaign meeting held in Kattumannar kovil due to astami and navami.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X