ரூ. 4 கோடியை விநியோகித்த அதிமுக... அரியலூரில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரும் பாமக

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கக் கோரி அத்தொகுதி பாமக வேட்பாளர் க. திருமாவளவன் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சை தவிர 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் நாள் அன்று பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 68 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

PMK candidate requests EC to stop vote counting in Ariyalur

இந்நிலையில் அரியலூர் தொகுதி பாமக வேட்பாளர் க. திருமாவளவன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

அரியலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தாமரை எஸ்.ராஜேந்திரன் வாக்காளர்களுக்கு ரூ. 4 கோடி வரை விநியோகம் செய்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரை அரியலூர் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும்.

இது குறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கும், சென்னையில் உள்ள தேர்தல் ஆணையருக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+