கரும்பு, மஞ்சள் தோராணம்… புதுப்பானையில் பொங்கல் வைத்த பெண்கள்: பாமக கொண்டாடிய பொங்கல்
சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பாட்டாளி மக்கள் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். சென்னை ஈக்காட்டுதாங்கலில் தெருக்கள் முழுவதும் கரும்பு, மஞ்சள் தோரணங்கள் கட்டி கிராமங்கள் போல மாற்றியிருந்தனர்.
தெருவெங்கும் வண்ண வண்ண கோலங்கள்... வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டு முன்பு வாசல்களில் அலங்கரித்து மண் பானைகளில் 300 பெண்கள் பொங்கலிட்டனர்.
பொங்கல் விழாவுக்கு வந்த டாக்டர் ராமதாசை கிராமிய இசை முழங்க விழா மேடைக்கு அழைத்து வந்தனர். பொங்கல் வைத்த பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

கோலப்போட்டி
கோலப்போட்டியில் வெற்றி பெற்ற மகாலட்சுமி, லலிதா, ராதிகா ஆகியோருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டுப்புடவை பரிசாக வழங்கினார்.
உழவர்களுக்கு நன்றி
அதே உற்சாகத்தோடு மைக் பிடித்த ராமதாஸ் உழவர் தினத்தைப் பற்றியும், பொங்கல் கொண்டாடுவதன் அவசியம் பற்றியும் தெரிவித்தார்.
நான் கொண்டாடும் ஒரே விழா பொங்கல் விழாதான். இது உழவனுக்கு நன்றி சொல்லும் விழா. யாராக இருந்தாலும் உழவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்றார் ராமதாஸ்.
சிறுபான்மை சமுதாயம்
இங்கு பேசிய சிறுபான்மை சமூகத்தினர் தங்கள் அச்சத்தை வெளியிட்டார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். எவரும் சிறுபான்மை மக்களை தொட பா.ம.க. அனுமதிக்காது.
சமய நல்லிணக்கம்
இது பெரியார் பிறந்த மண். இங்கு அது நடக்காது. அந்த மாதிரி எண்ணங்களை ஊடுருவவும் விடமாட்டோம். பா.ம.க.வை பொறுத்த வரை மக்களிடம் நல்லெண்ணத்தை விதைத்து வருகிறது. நாம் தமிழர்கள். தமிழர்களாக சமய நல்லிணக்கத்தோடு வாழ்வோம். எந்த மதமும் பிரிய வேண்டும். வன்மம் வேண்டும் என்று சொல்லவில்லை. அமைதி பூங்காவான தமிழகத்தில் மத கலவரம் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று முடித்தார் ராமதாஸ்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications