திமுக ஊழல் கட்சி.. ராமதாஸ் கடும் தாக்கு.. அப்போ கூட்டணி ப்ளான் இல்லையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மீது பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு அளித்தது வருந்தத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2ஜி ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்ட கட்சி என திமுக மீது சாடி ராமதாஸ் டிவிட் செய்துள்ளார். சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து ராமதாஸ் உடல் நலம் விசாரித்தார்.

எனவே, மீண்டும் திமுகவுடன், பாமக கூட்டணி வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராமதாஸின் டிவிட்டுகளை வைத்து பார்க்கும்போது இரு கட்சிகளுக்கும் நடுவே அரசியல் ரீதியான எதிர்ப்பு தொடருவது தெளிவாகிறது.

ஊழல் கட்சி

இடைத் தேர்தலில் 2ஜி ஊழல், ஃபெரா ஊழல், அமில வீச்சு பிரபலங்கள் போட்டி. அய்யோ பாவம் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். பேசாமல் தொகுதி பெயரை ஜெயலலிதா நகர் என மாற்றிவிடலாம்!

திமுகவுக்கு ஆதரவளிப்பது அழகல்ல

ஊழல் கட்சிகள், காங்கிரசுடன் கூட்டணி இல்லை என பிரகாஷ் காரத் அறிவித்ததற்கு அடுத்த நாளே ஊழல் கட்சிக்கு தனிமேடை போட்டு ஆதரிப்பது அழகா?

திமுக புனிதமாகிவிட்டதா?

2016-ல் ஊழல் கட்சியாக தெரிந்த திமுக இப்போது புனிதமாகி விட்டதா? திசம்பர் 5 அல்லது அதற்கு பிறகு 2ஜி ஊழல் வழக்கில் திமுக தண்டிக்கப்பட்டால் தோழர்களின் நிலைப்பாடு என்ன?

முடிவை திரும்ப பெறுக

ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவு வருந்தத்தக்கது. நியாயப்படுத்த முடியாத நிலைப்பாட்டை திரும்பப்பெற வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+