சொன்னாங்களே, எங்களுக்கும் தருவோம்னு சொன்னாங்களே.. கதறும் பாமக!
சென்னை: அன்புமணி ராமதாஸுக்கு கேபினட் அமைச்சர் பதவி தரப்படும் என்று நரேந்திர மோடி உறுதியளித்திருந்ததாக பாமக தரப்பில் குமுறல் வெளியிடப்பட்டுள்ளது.
மோடி அத்தனை உறுதிமொழி கொடுத்தும் பதவி தரப்படவில்லையே என்று பாமகவினர் புலம்புகின்றனர். அதேசமயம், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது அன்புமணிக்கு கேபினட் அமைச்சர் பதவி தரப்படும் என்று மோடி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் பாமக தரப்பில் பேசுகிறார்கள்.
இதை அன்புமணியை போனில் அழைத்து மோடியே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

எட்டு தொகுதிகளில் போட்டியிட்டு
பாமகவுக்கு பாஜக கூட்டணியில் எட்டு தொகுதிகள் தரப்பட்டன. இதில் தர்மபுரியில் மட்டுமே பாமக தீவிர அக்கறை காட்டியது. அங்கு மட்டுமே வென்றது.

உடனே பதவி வேணும்னா...
தர்மபுரியில் அன்புமணி ஜெயித்ததுமே அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி வேண்டும் என்று பாஜகவுக்கு போனைப் போட்டு விட்டனர். வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு டெல்லிக்கும் தகவல் சொல்லப் புறப்பட்டு விட்டனர்.

உடனே முடியாது
ஆனால் உடனடியாக அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறி விட்டது பாஜக. இதனால் பாமகவுக்கு கடும் அதிருப்தியாகி விட்டது. பாமகவை விட ராமதாஸ் குடும்பம்தான் கடும் ஏமாற்றத்தைச் சந்தித்து விட்டதாம்.

முதல் சுற்றில் இணை அமைச்சர் பதவிதான்
இந்த நிலையில் திங்கள்கிழமையன்று மோடியே, அன்புமணிக்கு போன் போட்டு முதல் சுற்றில் ஒரே ஒரு இணை அமைச்சர் பதவிதான் தர முடியும் என்று கூறினாராம். அன்புமணியே கேபினட் அமைச்சர் பதவிதான் வேண்டும் என்று கூறினாராம். இதையடுத்து அடுத்த முறை அதுகுறித்து நான் நிச்சயம் யோசிக்கிறேன் என்று கூறி விட்டாராம் மோடி.

ஒரு மாதத்தில்
ஒரு மாதத்தில் அடுத்த அமைச்சரவை மாற்றம் நடக்கும். அப்போது நிச்சயம் உங்களது பெயரை பரிசீலிக்கிறேன் என்றும் மோடி உறுதி அளித்தாராம்.

ராஜ்நாத் சிங்கும்
பாமக குழுவினர் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தபோதும் கூட இதேபோலத்தான் சொன்னாராம்.

அந்த சிபிஐ கேஸ் மட்டும் இல்லாவிட்டால்
அன்புமணி ராமதாஸ் மீது சிபிஐ வழக்கு நிலுவையில் உள்ளது. அதுதான் உடனடியாக அவருக்கு கேபினட் அமைச்சர் பதவியைக் கொடுக்க இடைஞ்சலாக மாறியுள்ளதாம் .வழக்கு நிலுவையில் உள்ளதால் அன்புமணியை கேபினட்டில் சேர்க்க மோடி யோசிக்கிறாராம்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications