உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி: அன்புமணி
சென்னை: வரும் உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியைத் தழுவினர். அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட பென்னாகரம் தொகுதியில் அவருக்கு இரண்டாவது இடமே கிடைத்தது. அதேபோல் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி போட்டியிட்ட மேட்டூர் தொகுதியிலும், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு ஜெயங்கொண்டம் தொகுதியிலும் தோல்வியை தழுவினர்.

இந்நிலையில், பசுமைத் தாயகம் அமைப்பின் தினத்தை முன்னிட்டு, சென்னை அய்யப்பந்தாங்கலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. வழக்கறிஞர்கள் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். அப்துல்கலாம் நினைவிடம் அமைக்க போதிய இடத்தை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்'' என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications