புதுச்சேரியில் மதுக்கடைகள் நேரம் குறைக்கப்படும்: பாமக தேர்தல் அறிக்கை
புதுவை: மதுக்கடைகளின் நேரம் குறைப்பு, சாலையோரங்கள் மதுக்கடைகள் மூடப்படும் மது மற்றும் போதையினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதுவை சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முதல் வேட்பாளர் பட்டியல் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது. மீதமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படுவார்கள் என பாமக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று சில தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி
இரண்டு கட்டமாக வெளியிடப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் விபரம்:
காரைக்கால் தெற்கு : மஸ்தான்
நெடுங்காடு : முனியசாமி
முத்தியால்பேட்டை : கோபி
மங்கலம் : மதியழகன்
காலாப்பட்டு : செல்வராசு
இந்திரா நகர் : வடிவேல்
திருநள்ளாறு : தேவமணி
மணவெளி : முருகன்
மண்ணாடிப்பட்டு ; வெங்கடேசன்
நெட்டப்பாக்கம் : சுப்பிரமணியன்
நெல்லித்தோப்பு : புருஷோத்தமன்
அரியாங்குப்பம் : லட்சுமணன்
தட்டாஞ்சாவடி : முருகசாமி
ராஜ்பவன் : பண்டியராஜன்
லாஸ்பேட்டை : முரளி கிருஷ்ணா
உழவர்கரை ; முருகன்
காரைக்கால் வடக்கு : ஜெயகணேஷ்
மாகி : சாஜி குமார்
உருளையன்பேட்டை : சுப்பிரமணியன்
டி.ஆர்.பட்டினம் ; துரை
ஊசுடு : குமரேசன்
திருபுவனை : சுனிதா
பாகூர் : வேணுகோபால்
இதனிடையே புதுச்சேரியில் பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர். இதன் பின்னர் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், மதுக்கடைகளின் நேரம் குறைப்பு, சாலையோரங்கள் மதுக்கடைகள் மூடப்படும் மது மற்றும் போதையினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க மதுவிலக்கு அமல்படுத்தப்படும். புதுச்சேரியில் வார்டுதோறும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாமக கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications