போட்டியிட விரும்பும் 10 தொகுதிகளையும் பங்கு போடும் பாஜக கூட்டணி: நடையைக் கட்டிய பாமக
சென்னை: தாம் வேட்பாளர்களை அறிவித்த பெரும்பாலான தொகுதிகளை பாரதிய ஜனதாவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இலக்கு வைத்து கேட்பதால் அந்த கூட்டணியை விட்டு வெளியேற பாமக முடிவு செய்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கெனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தியது.
தாம் ஏற்கெனவே அறிவித்த 10 தொகுதிகளுடன் தருமபுரியையும் தர வேண்டும் என்று பாமக கேட்டது. ஆனால் பாமக வேட்பாளர்களை அறிவித்த சேலம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க கோரியது பாஜக .

தேமுதிகவும் பறிக்கிறது?
மேலும் தேமுதிகவோ பாமக வேட்பாளர்களை அறிவித்த ஆரணி, கடலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய தொகுதிகளையும் கேட்டிருக்கிறது.

ஒன்றுதான் மிஞ்சும்
இதனால் 10 தொகுதிகளில் ஒன்றுதான் மிஞ்சும் என்று பாமக அஞ்சியது.

போராடும் அன்புமணி
இதனால் பாஜகவுடனான கூட்டணி சரிப்பட்டு வராது என்று பாமகவின் நிர்வாகிகள் கூறிவந்தனர். ஆனாலும் அன்புமணி ராமதாஸ் தான் எப்படியும் சமாளிக்கலாம் என்று கூறிக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்கிறார்.

இப்படி ஒரு கூட்டணி தேவையா?
ஆனால் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வரும் 10 தொகுதிகளில் 9ஐ இதரகட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து கூட்டணியில் இருக்கத்தான் வேண்டுமா? என்று காடுவெட்டி குரு போன்றோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெளியேறும் பாமக
இதனால் பாஜக அணியைவிட்டு பாமக வெளியேறுவது தவிர்க்க முடியாத ஒன்று என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications