காமராஜர் ஆட்சியை கொடுக்கும் தகுதி பாமகவிற்கு மட்டுமே உண்டு: டாக்டர் ராமதாஸ்
கோவை: தமிழகத்தில் ஊழல் மற்றும் மது இல்லாத, நேர்மையான காமராஜர் ஆட்சியை அமைக்கும் தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே உள்ளது என கோவை கொங்கு மண்டல மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற அக்கட்சியின் கொங்கு மண்டல அரசியல் மாநாட்டில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பேசும் போது இரவு பத்தரை மணி. நேரமின்மையாலோ என்னவோ அமைதியாக ஆரம்பித்து சுருக்கமாக முடித்துக்கொண்டார். பேசியது குறைவுதான் என்றாலும் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி மட்டுமே பொற்கால ஆட்சி என்று கூறி அதிர்ச்சி அட்டாக் கொடுத்தார்.

மலிவான அரசியல்
தமிழகத்தை 50 ஆண்டுகாலம் ஆண்ட இரு திராவிட கட்சிகளும் சீரழித்துவிட்டனர். தமிழ்நாட்டை 25 ஆண்டுகாலம் அதிமுக ஆண்டிருக்கிறது. 22 ஆண்டுகாலம் திமுக ஆட்சி செய்திருக்கிறது. திமுகவினர் காமராஜரையும் விட்டு வைக்கவில்லை. நிறத்தைப் பார்த்து அண்டங்காக்கா என்று அநாகரீகமாக பேசினார்கள். மலிவான அரசியல் செய்கிறார்கள் என்றார்.

காமராஜர் ஆட்சி
யார் யாரோ காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் ஊழல் மற்றும் மது இல்லாத, நேர்மையான காமராஜர் ஆட்சியை அமைக்கும் தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே உள்ளது.

திரும்பி பார்க்கிறார்கள்
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் எங்களை திரும்பி பார்க்கிறார்கள். யார் இந்த அன்புமணி ராமதாஸ் என தமிழ்நாட்டில் பேசக் கூடிய அளவிற்கு, விவாதிக்கக் கூடிய நிலைமையை உருவாக்கியிருக்கின்றோம். இனி வரும் காலங்களிலும் மேலும் அன்புமணி பேசப்படுவார். அவருடைய திட்டங்கள், கொள்கைகள் பற்றி சாதாரண மனிதன் முதல் படித்தவர்கள் வரை பேசக் கூடிய நிலை வரும்.

மது இல்லா தமிழகம்
மதுக்கடைகளை மூடுவோம் என்று இரு திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூறுவார்களா. நாங்கள் சொல்லுகிறோம். மக்களுடைய வாக்குகளை, பெண்களுடைய வாக்குகளை கவருவதற்காக நாங்கள் சொல்லவில்லை. இதனை 30 ஆண்டு காலமாக சொல்லி வருகிறேன். மது இல்லா தமிழகம் என போராடி வருகிறேன். மக்களே மாற்றத்தை விரும்புங்கள். மாற்றத்தை நோக்கி செல்லுங்கள் என்றும் கூறி தனது உரையை முடித்தார் டாக்டர் ராமதாஸ்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications