ஜெ.வின் போயஸ் கார்டன் வீட்டை யாராலும் வாங்க, விற்க, மாற்றித் தர முடியாது.. தீபா திட்டவட்டம்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அரசுடைமையாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு ஜெ. தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: போயஸ் கார்டன் வீடு எங்களது பூர்வீகச் சொத்து. அதனை யாரும் வாங்க விற்க முடியாது என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனர் தீபா தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து தீபா செய்தியாளர்களிடம் இன்று பேசியதாவது:

Poes Garden converts memorial, Deepa opposes

மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் எங்களது பூர்வீக சொத்து. அதனை யாரும் வாங்கவோ விற்கவோ, வேறு யாருக்காவது மாற்றித் தரவோ முடியாது. தமிழக முதல்வர் இப்படி அறிவித்திருப்பது ஆச்சர்யமாகவும் கேள்விக்குறியாகவும் இருக்கிறது.

இதனை எதிர்த்து நான் வழக்கு தொடர்வேன். இதனை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. அந்த இடத்திற்கு உரியவர்கள் நாங்கள். அந்த இடத்தைப் பராமரிக்கவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை மற்றும் அவரது பாரம்பரியத்தை பாதுகாப்பது எனது கடமை.

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக முதல்வர் அறிவிப்பதற்கு முன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஏற்கனவே போயஸ் இல்லம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று தீபா கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்றும் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு அரசுடைமையாக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+