போயஸ் கார்டன் சொத்து ஜெ.வின் ரத்த வாரிசுகளுக்கே சொந்தம்.. டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு அவரின் ரத்த வாரிசுகளுக்கே சொந்தம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சொத்து ரத்த வாரிகளுக்கு மட்டுமே சொந்தமானது என டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி. தினகரன் கூறுகையில், " ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு தீபா வந்து சென்றதும், அவரை யார் அழைத்து வந்தார் என்பதும் எனக்குத் தெரியாது. டி.வி.சேனல் செய்திகளில் பார்த்துதான் அங்கு என்ன நடந்தது என்பதை நான் அறிந்தேன்.

ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையம் அமைந்துள்ள போயஸ் தோட்டம் எங்களுக்கு கோவில் போன்றது. ஜெயலலிதா நம் அனைவருக்கும் தெய்வம் போன்றவர். அவரது சொத்தை எடுத்து கொள்வதற்கு நான் யார்?
ஜெயலலிதாவின் வீட்டில் அவருடைய நேர்முக உதவியாளர் பூங்குன்றன் 40 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்த ராஜம் மற்றும் சிலரே உள்ளனர். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு ஒரே ஒரு தடவை மட்டும் நான் அங்கு சென்று வந்தேன்.
நான் ஏன் அந்த சொத்தை கைப்பற்ற வேண்டும். அந்த சொத்து ரத்த வாரிகளுக்கு மட்டுமே சொந்தமானது.
அப்படி இருக்க, தீபா என் மீது ஏன் புகார் தெரிவிக்கிறார் என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் சட்டப் படியான வாரிசு என்பதை அவர் தெரிவித்து அந்த சொத்துக்களை எடுத்து கொள்ளலாம். இந்த விவகாரத்தில் எனக்கு எந்த பங்கும் இல்லை." என்று தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications