சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு போடப்பட்ட பூட்டை போராடி உடைத்த போலீஸ்!
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை கிண்டி கத்திபாரா மேம்பாலத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த பூட்டை போலீஸார் போராடி உடைத்தனர். இதனால் வாகனங்கள் செல்கின்றன.
சென்னை: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை கிண்டி கத்திபாரா பாலத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த பூட்டை போலீஸார் போராடி உடைத்தனர்.
வறட்சி நிவாரணம், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 31-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு மத்திய அரசு செவி சாய்க்காததை கண்டித்து, சென்னையின் கிண்டி கத்திபாரா மேம்பாலத்தை பூட்டு போட்டு போராட்டத்தில் மாணவர், இளைஞர் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இரு புறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. சென்னையின் பெரும் பகுதியின் போக்குவரத்தே முடங்கியது. எஸ் வடிவத்தில் உள்ள இந்த மேம்பாலம் முழுவதும் இரு புறமும் சங்கிலியால் கட்டி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை கைவிடும்படி போலீஸார் கூறியும் போராட்டக்காரர்கள் கேட்காததால், போலீஸார் வலுக்கட்டாயமாக பூட்டை உடைத்தனர். இதனால் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பூட்டை உடைத்ததால் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது..
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications