கருணாநிதி பற்றி தவறாக பதிவிட்ட நாம் தமிழர் இளைஞரணி அமைப்பாளர்.. அதிரடி கைது
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி பேஸ்புக்கில் தவறாக பதிவிட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் தீனதயாளன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி பேஸ்புக்கில் தவறாக பதிவிட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி அமைப்பாளர் தீனதயாளன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் சிலர் அவர் உடல்நிலை மோசமாக இருக்கும்போது கூட அவருக்கு எதிராக கருத்துக்களை உமிழ்ந்து வருகிறார்கள். சில பாஜக, நாம் தமிழர் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மருத்துவமனை
இரண்டு நாள் முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருணாநிதியை சந்திக்க, காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க சீமான் காவேரி மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவரின் உடல்நிலை பற்றி ஸ்டாலினிடம் விசாரித்தார்.

கண்டிப்பு காட்டினார்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிடக்கூடாது என்று ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.ப திவிட்டால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்.கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும். அவர் உடல்நிலை தேறி மீண்டும் அரசியல் தளத்தில் பணியாற்ற வேண்டும், என்றுள்ளார்.

கைது செய்தனர்
இந்தநிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி பேஸ்புக்கில் தவறாக பதிவிட்ட நாம் தமிழர் கட்சி இளைஞரணி அமைப்பாளர் தீனதயாளன் கைது செய்யப்பட்டுள்ளார்.குடியாத்தம் பிச்சனூரை சேர்ந்த தீனதயாளன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

என்ன நடந்தது
கருணாநிதியை கிண்டல் செய்யும் விதமாக அவரது உடல்நிலை குறித்து இவர் பொய்யான தகவலை பரப்பி இருக்கிறார்.திமுக உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே போலீஸ் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட கூடாது என்று கண்டித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications