ஒரே வருடத்தில் 8 கொலை.. கடித்து உயிர் பறிக்கும் வேலூர் சைக்கோ.. ஆந்திராவில் அதிரடி கைது
மக்களை கடித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் முனுசாமி ஆந்திர போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான்.
Recommended Video

வேலூர்: மக்களை கடித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் முனுசாமி ஆந்திர போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான். வேலூரை சேர்ந்த இவன் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இப்படி கொலை செய்து வருகிறான்.
கடந்த ஆந்திராவில் நடந்த தம்பதிகளின் கொலை ஒன்றில் கிடைத்த கை ரேகையை வைத்து இவனை பிடித்து இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் இன்னொரு தம்பதிகளின் கொலையும் நடந்தது.
இரண்டு கொலையையும் முனுசாமிதான் செய்து இருக்கிறான். இரண்டிலும் இவனது பல் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீசார் இவனை விசாரித்து வருகிறார்கள்.

தொடக்கம்
இவன் முதலில் திருடனாக வாழ்க்கையை தொடங்கியுள்ளான். 1992ல் இருந்து இருந்தே இவன் திருட்டு தொழிலில் இருக்கிறான். அடிக்கடி சிறைக்கு சென்று பெயிலில் திரும்ப வந்து பின் மீண்டும் திருடுவான். ஆந்திராவில்தான் அதிகமாக திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கொலை செய்ய ஆரம்பித்தான்
ஆனால் சில நாட்களுக்கு பின் இவனுக்கு மனநலம் சரியில்லாமல் போன காரணத்தினால் கொலை செய்ய தொடங்கியுள்ளான். வீட்டில் தனியாக இருப்பவர்களை கடித்து கொலை செய்து, அந்த வீட்டில் சாப்பிட்டுவிட்டு செல்வது இவனது வழக்கம். சாப்பாட்டிற்காக அடிக்கடி கொலை செய்வான் என்று கூறப்படுகிறது.

எத்தனை
இதுவரை 2017ல் மட்டும் 8 கொலைகள் செய்து இருக்கிறான். அதற்கு முன்பு எத்தனை கொலைகள் செய்தான் என்று கூறப்படவில்லை. மேலும் இதில் நிறைய குழந்தைகள், பெண்கள் அடக்கம். 200 ரூபாய் பணம் கொடுக்கவில்லை, பேசுவதற்கு செல்போன் கேட்டு கொடுக்கவில்லை என்று நிறைய கொலைகள் செய்து இருக்கிறான்.

கொள்கை
இவனுக்கு முக்கியமான கொள்கை ஒன்று இருக்கிறது. எங்கே திருடினாலும் பணத்தையும், உணவையும் மட்டுமே எடுப்பான். எந்த வீட்டிலும் இதுவரை நகையை திருடியது இல்லையாம். இவனுக்கு என்ன மாதிரியான மருத்துவம் கொடுக்கலாம் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications