கரூர் அருகே மனல் லாரி டிரைவர்கள் போராட்டம் - தீவைப்பு, போலீஸ் மீது கல்வீசி தாக்குதல்
கரூர்: கரூர் மாவட்டம் மயனூரில் மணல் லாரி டிரைவர்கள் போலீஸ் மீது கல்வீசி ஆர்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் போலீஸ் ஒருவர் காயம் அடைந்தார்.
கரூர் அருகோ மாயனூர் மணல் விற்பனை நிலையத்தில் 3 நாட்கள் கடந்தும் மணல் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. போலீஸ் மீது கல்வீசி தாக்கியதில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.

கரூர் மாவட்டத்தில் 8 இடங்களில் மணல் குவாரிகள் இயங்கி வருகிறது. வருமானவரித் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டியின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த மணல் குவாரிகள் அனைத்தும் முடங்கியுள்ளன.
ரெட்டி கைதுக்கு முன்பாக நாள் ஒன்றுக்கு 1000 மணல் லாரிகள் வரை மணல் விற்பனை செய்யப்பட்ட மாயனூர் மணல் குவாரியில் தற்போது 200 லாரிகளுக்கு மட்டுமே மணல் விற்பனை செய்யப்பட்டது.
இதனால் 1000 கணக்காண லாரிகள் மூன்று நாட்களாக தேக்கமடைந்தன. பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுனர்கள் கரூர்-திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றபோது போலீசாருக்கும், லாரி ஒட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டினர். போலீசார் மீது லாரி ஓட்டுநர்கள் கல்வீச்சு நடத்தினர். இதில் காவலர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மணல் விற்பனை நிலைய அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் மாயனூர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கலவரம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜ்சேகரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications