கால்பந்தாட்ட வீரரை தாக்கியதாக நடிகர் சூர்யா மீது போலீசில் புகார்
சென்னை: நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக கூறி அடையார் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கால்பந்து விளையாட்டு வீரர் பிரேம் குமார் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை, பாரிமுனையைச் சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் அடையாறு திரு.வி.க. பாலம் அருகே செல்லும்போது, முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்து நின்றது. இதை சற்றும் எதிர்பாராத பிரேம்குமார், மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார்.

ஆனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, அந்த காரின் மீது மோதியது. இந்த விபத்தில் காரின் பின்பகுதியிலும், மோட்டார் சைக்கிளின் முன்பகுதியிலும் லேசான சேதம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அந்த காரை ஓட்டி வந்த பெண், பிரேம்குமாரிடம் கார் சேதமடைந்தது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
பிரேம்குமாரும், அந்தப் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இருவரும் சாலையின் நடுவில் நின்று கொண்டு பிரச்னை செய்ததால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மக்கள் கூட்டம் கூடியது. இதனிடையே அங்கு காரில் வந்த நடிகர் சூர்யா, இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் பிரேம்குமாருக்கும், சூர்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதையடுத்து விபத்தின் போது, நடிகர் சூர்யா பொதுமக்கள் முன்னிலையில் தன்னை தாக்கியதாக சென்னை சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் பிரேம்குமார் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சூர்யா விளக்கம் அளித்துள்ளார். சென்னை அடையாறு அருகே காரில் சென்ற பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக் கேட்டதாகவும், அந்த இளைஞர்களிடம் இருந்து பெண்ணை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தின்போது இளைஞர்களை தான் தாக்கவில்லை என்றும், கூட்டம் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும் சூர்யா கூறியுள்ளார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications