மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தின் மேல் பறந்த விமானம் வதந்திதான்- நெல்லை எஸ்.பி விக்ரமன்
நெல்லை: மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ கிரையோஜெனிக் மையத்தின் மேலே குட்டி விமானம் பறந்ததாகவும், கிளைடர் விமானம் பறந்ததாகவும் வெளியான தகவல்கள் அனைத்தும் கிளப்பிவிடப்பட்ட வதந்தி எனவும், தேடுதல் வேட்டையில் எதுவும் சிக்கவில்லை எனவும் நெல்லை மாவட்ட எஸ்.பி விக்ரமன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே மகேந்திரகிரி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதியில் இஸ்ரோவின் கிரையோஜெனிக் டெஸ்டிங் மையம் அமைந்துள்ளது.

இந்த மையத்தின் மேலே கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தொடர்ந்து கிளைடர் விமானம் பறந்ததாக பொதுமக்களிடம் தகவல் பரவியது. மேலும், அது மர்மான பொருளாக தெரிந்ததாகவும் வதந்திகள் பரவின. இதனால் இஸ்ரோவை யாராவது உளவு பார்க்க விமானம் மூலம் வந்து சென்றிருக்கலாம் என தகவல்கள் வெளியானது. இதையடுத்து நெல்லை மாவட்ட டி.ஐ.ஜி அன்பு, எஸ்.பி.விக்ரமன் ஆகியோர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
கிட்டதட்ட 200 போலீஸார், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் மதுரை பிரிவினர், வனத் துறை அலுவலர்கள் இணைந்து 5 குழுக்களாகப் பிரிந்து இஸ்ரோ மையம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் வியாழக்கிழமையன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக நேற்று நெல்லை மாவட்ட எஸ்.பியான விக்ரமன், "மகேந்திரகிரி மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேலும் டெலஸ்கோப், ரேடார் கருவி ஆகியவற்றின் மூலம் நவீன தொழில்நுட்ப உதவியுடன் சோதனை செய்ததில், திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ஆகாய விமானங்கள் மட்டுமே பதிவாகியுள்ளது. எனவே கிளைடர் விமானங்கள் பறந்தது என்பது வெறும் வதந்தி என தெளிவாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications