தமிழகத்தில் மீண்டும் ஊடுருவிய பயங்கரவாதிகள்.. உளவுத் துறை எச்சரிக்கை.. 4 பேரிடம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. இதனால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Police detains 4 from Karnataka registration vehicle as Intelligence agency alerted about terrorist

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக பதிவு எண் கொண்ட காரில் தீவிரவாதி வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் சுற்றி திரிவதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் அனைத்து மாவட்ட போலீஸாரும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர். போலீஸார் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக பதிவு எண் கொண்ட சந்தேகத்துக்குரிய வாகனங்களை தடுத்து நிறுத்தும் போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வாகனத்தையும் சோதனை செய்கின்றனர். இந்த நிலையில் திருப்பூரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அவினாசி அருகே வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக வந்த கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனத்தை சோதனை செய்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+