அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக புகார்: பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அனுமதி பெறாத இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்ததாக தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி மலர்ந்துள்ளன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் சார்பில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா கடந்த 17ம் தேதி பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக அக்கட்சியினர் தாளமுத்து நகர் வழியாக செல்ல அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் அங்கு பேசுவதற்காகவும், பிரசாரம் செய்யவும் அனுமதி பெறவில்லை.
இந்த நிலையில் 17ம் தேதி அந்த வழியாக பிரேமலதா வந்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். இதுகுறித்து அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி நவசுப்பிரமணியன் தாளமுத்து நகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் பிரேமலதா மீது தேர்தல் வீதிமுறைகளை மீறியும், அனுமதி பெறாமலும் பிரச்சாரம் செய்ததாக 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தேமுதிகாவை சேர்ந்த நடிகர் ராஜேந்திரநாத் மீது தென்பாகம் போலீசார் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications