For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடனே கைது செய்ய எச். ராஜா என்ன திருமுருகன் காந்தியா!

பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தலைமறைவாகி விட்டார் என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உடனே கைது செய்ய எச். ராஜா என்ன திருமுருகன் காந்தியா!- வீடியோ

    சென்னை: வழக்கம்போல பாஜக தன் வேலையை காட்ட துவங்கிவிட்டது.

    வந்ததும் வராததுமா ரவுண்டி கட்டி ஏர்போர்ட்டிலேயே கைது செய்ய எச்.ராஜா என்ன திருமுருகன் காந்தியா? அல்லது ஓவர்நைட்டில் ஓடிப்போய் கைது செய்ய எச்.ராஜா என்ன மன்சூரலிகானா?

    பாஜகவின் அபிமானி என்ற ஒரு காரணத்திற்காகவே எஸ்.வி.சேகர் இதுவரை காப்பாற்றப்பட்டு வரும்போது, கட்சியின் தேசிய செயலாளரான எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய முடியுமா என்ன?

    நீதித்துறை அவமதிப்பு

    நீதித்துறை அவமதிப்பு

    நம் கண்ணெதிரிலேயே நடமாடியும், விழாக்களில் செல்ஃபி எடுத்தவர்தான் எஸ்.வி.சேகர்... ஆனாலும் என்ன செய்ய முடிந்தது தமிழக போலீசால்? ஆனால் அவர் பேசியிருந்தது பெண் பத்திரிகையாளர்களை பற்றிதான். ஆனால் ராஜா பேசியதோ நீதித்துறையை பற்றி.

    சவால் விட்டவரா தலைமறைவு?

    சவால் விட்டவரா தலைமறைவு?

    நேற்று மாலையிருந்து ராஜாவை காணோம் என்று சொல்கிறார்கள். அவரை பிடிக்க தனிப்படையும் செல்கிறதாம். கட்சியை வளர்க்கிறேன் என்ற பெயரில் இவ்வளவு காலம் வாய்த்துடுக்குத்தனம் செய்தவர் மாயமானது அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும், விந்தையாகவும், இருக்கிறது. இவ்வளவு காலம் பாஜக என்ற போர்வையிலேயே கெத் காட்டிவிட்டு இப்போது தலைமறைவு என்பது எச்.ராஜாவுக்கு பொருந்தவே இல்லை. எல்லாவற்றிற்கும் சவால் விட்டவரா தலைமறைவாக இருக்கிறார் என்று ஆச்சயரிமாக உள்ளது.

    தேசிய கட்சிக்கு அழகா?

    தேசிய கட்சிக்கு அழகா?

    ஒருவேளை, பாஜகவை சேர்ந்தவர்களின் யுக்தி இதுதானோ? "பேசுவதெல்லாம் பேசிவிடுவது, பிறகு அது நான் இல்லை என்று சொல்வது, மீறி பஞ்சாயத்து உச்சக்கட்டத்துக்கு போனால் மாயமாகி மறைந்து கொள்வது"... இதெல்லாம் ஒரு தேசிய கட்சிக்கு அசிங்கமாக தெரியவில்லையா?

    ஸ்டாலினுக்கு சவால்

    ஸ்டாலினுக்கு சவால்

    ஸ்காட்லாண்டு போலீசுக்கு அடுத்தபடியான தமிழ்நாட்டு போலீஸ்காரர்கள் எப்போது ராஜாவை கண்டுபிடித்து கைது செய்வது? உண்மையிலேயே ராஜா கைது செய்யப்படுவாரா? என தெரியவில்லை. இப்படி ஒரு தலைவர் நீதித்துறையை அசிங்கமாக பேசிட்டு தலைமறைவும் ஆகி இருப்பதற்கு பாஜக சார்பில் ஒரு கண்டனமும் இதுவரை காணோம். தமிழிசை சம்பந்தமே இல்லாமல் ஸ்டாலினுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு தலைவர் தலைமறைவு, மற்றொரு தலைவர் சவால்விடுவது என்றால் ஏதாவது பொருத்தமாக உள்ளதா?

    சம்மன் அனுப்பப்பட்டது

    சம்மன் அனுப்பப்பட்டது

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பு குறித்து அமமுக ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படி அவர் விமர்சித்தது குறித்து 2 வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட்டின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். இதையடுத்து, தங்க.தமிழ்ச்செல்வன் சம்பந்தமாக சொன்ன புகார்குறித்து உத்தரவிடப்பட்டு, பின்னர் நீதிமன்ற அவமதிப்பு புகார் அடிப்படையில் தங்க தமிழ்செல்வனுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரழைக்கப்பட்டார். அதற்கு நேரில் வந்து மன்னிப்பு கோரியும் இன்னும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை

    பொத்தலாகுமோ சட்டம்

    பொத்தலாகுமோ சட்டம்

    எனினும், இதேபாணியைத்தான் நீதிமன்றம் தற்போது எச்.ராஜா விவகாரத்தில் கையாள வேண்டும். ஏற்கனவே வழக்கறிஞர்கள் தரப்பில் இது சம்பந்தமான நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள். இனிதான் மற்ற தரப்பு எதிர்ப்பு குறித்து தெரியவரும். சட்டம் ஒழுங்கு அடித்தட்டு மக்களுக்குதான் பொருந்தி போய் கொண்டிருக்கிறது என்பதுதான் விசித்திர, வேதனையான உண்மை. நைந்துபோய் பொத்தலாகி கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு எழ துவங்கிவிட்டது. அதனால்தான் குறிப்பிட்ட சமுதாயத்தினர்கள் என்றுமே தண்டிக்கப்படுவதில்லையோ?

    தண்டிக்க வேண்டும்

    தண்டிக்க வேண்டும்

    அப்படியே தண்டித்தாலும் அது ஒரு சில மணித்துளிகள்தானோ? என்ற எண்ணமும் கூடவே எழுகிறது. தங்க.தமிழ்ச்செல்வனுக்கு எடுத்த நடவடிக்கையை எச்.ராஜாவுக்கும் உடனடியாக எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகளே கதறி கொண்டு வீதியில் வந்து முறையிடும் நிலையில் உள்ளபோது, பாசிச சக்திகளின் பிடியில் உள்ள எச்.ராஜாவுக்கு உயர்நீதிமன்றம்சரியான பாடத்தை இந்த முறையாவது கற்பிக்க வேண்டும்.

    English summary
    Police filed case on BJP National Secrtetary H.Raja
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X