காதல் போதை தலைக்கேறி.. 2 குழந்தைகளை பரிதவிக்க விட்டு ஓடிய தாய்!
Recommended Video

சென்னை: 2 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், கள்ளக்காதல் தலைக்கேறி போனதால் வீட்டைவிட்டு வெளியே ஓடிப் போய் இருக்கிறார்.
வேளச்சேரியை சேர்ந்த தம்பதி விஜய்ராஜேஷ்குமார், யாழினி தம்பதி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 30 வயதாகும் யாழினி தஞ்சாவூரை சேர்ந்தவர். என்றாலும் யாழினி தரமணியில் உள்ள சட்டக்கல்லூயில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
2 பிள்ளைகள் பெற்றாலும் யாழினியை படிக்க வைக்க கணவன் மிகவும் விருப்பப்பட்டுள்ளார். யாழினி படிக்கும் அதே வகுப்பில் ரித்தீஷ் என்பவரும் படித்துள்ளார். இவர் நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயபால் என்பவரின் மகன் ஆவார். ரித்தீஷ்-ற்கும் வயது 30 ஆகிறது.

ரித்தீஷ்-யாழினி காதல்
ஒரே வகுப்பில் படிக்கும் ரித்தீஷ் - யாழினி-க்கு கள்ளக்காதல் பத்திக் கொண்டது. 2 வருடமாகவே இந்த உறவு வளர்ந்துள்ளது. யாழினி தன் கள்ளக்காதலை மூடி மறைக்க நிறையவே முயற்சி செய்தார். ஆனாலும் விஷயம் கணவன் விஜய்-க்கு தெரிந்துவிட்டது. மனைவியை கூப்பிட்டு அறிவுரை சொன்னார்... யாழினி கேட்கவில்லை. அதனால் கண்டிக்கவும் செய்தார்... அதையும் யாழினி கேட்கவில்லை. காலேஜூக்கு இனி போக வேண்டாம் என்று விஜய், சொன்னார்... அதையும் யாழினியை காதிலே போட்டுக் கொள்ளவில்லை. அதோடு விஜய்-யிடம் சண்டைக்கும் வந்து விட்டார்.

யாழினி மாயம்
இந்த பிரச்சனை இருவருக்கும் தகராறாக வெடித்து, இதுதான் சாக்கு என்று யாழினி இரண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு தஞ்சாவூருக்கு தன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி யாழினியை காணவில்லையாம். 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு எங்கே சென்றார் என தெரியவில்லையாம். இதனால், பல இடங்களில் விஜய் யாழினியை தேடி உள்ளார்.

கணவன் புகார்
ஆனால் கிடைக்கவே இல்லை என்பதால், "மனைவியை காணவில்லை" என்று கணவர் விஜய் தஞ்சை மகளிர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மனைவி யாழினியை முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரீத்தீஷ் கடத்தி சென்று விட்டார். அவரை மீட்டு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாயமான ரித்தீஷ், யாழினி, மற்றும் இந்த கள்ளக்காதல் ஜோடிக்கு உடந்தையாக இருந்த நண்பர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

ஜீரணிக்க முடியவில்லை
அபிராமி, நிலானி, யாழினி என்று கள்ளக்காதலில் விழுந்து தொலைக்கும் பெண்கள் தங்களை சீரழித்து கொள்வதுடன், சுமந்து பெற்ற தங்கள் பெண் பிள்ளைகளின் வாழ்க்கையையும் சேர்த்து சீரழிப்பதை ஜீரணிக்கவும் முடியவில்லை... மன்னிக்கவும் முடியவில்லை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications