30 பவுன் நகைப்பையை ஹோட்டலில் மறந்த குடும்பம்: ஒரு பவுனும் குறையாமல் திரும்ப கிடைத்த 'அதிசயம்'
திருத்தணி: தாம்பரத்தில் ஒரு குடும்பத்தினர் ஹோட்டலில் மறந்து வைத்த 30 பவுன் நகையை போலீஸார் உடனடியாக கண்டறிந்து ஒப்படைத்துள்ளனர்.
தாம்பரத்தைச் சேர்ந்த சுகுமார் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஊழியர். தன்னுடைய குடும்பத்துடன் உறவினரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றிருந்தார்.
திருமணம் முடிந்ததும் நேற்று இரவு வீடு திரும்பிய அவர்கள் திருத்தணி அருகே உள்ள ஒரு ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டுள்ளனர்.
உணவு உண்ணும் மும்முரத்தில் 30 பவுன் உள்ள நகைப்பையை அங்கேயே வைத்து விட்டு மறந்துவிட்டனர். இதனைப் பற்றி தாம்பரம் வந்தடைந்த பின்பு தெரிந்து கொண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக திருத்தணி போலீசாரிடம் புகார் செய்தனர்.
இதனையடுத்து போலீசார் அந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் சாப்பாட்டு மேஜைக்கு அடியில் நகைப்பை இருந்தது. அந்நகைப்பை விசாரணக்குப் பின்பு, சுகுமார் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் ஒரு பவுனும் குறையவில்லை.
இதில் மிகவிரைவாக செயல்பட்டு நகைகளை கண்டறிந்த போலீசாருக்கு அக்குடும்பத்தினர் தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தனர்.
-
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications