கொலைநாடு... சசிகலாவை அழைத்து வந்து விசாரிக்க தயாராகிறது போலீஸ்?
சென்னை: கொடநாடு கொலைச் சம்பவங்களில் சசிகலாவையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன பொருட்கள் பற்றிய மர்மம் நீடிக்கிறது. பங்களாவில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மட்டுமே தங்கும் அறைகளுக்கு ஒரு சில நெருங்கிய பணியாளர்கள் தவிர யாருக்கும் அனுமதி கிடையாது. கொள்ளை நடந்தபோது இந்த அறைகளில் இருந்த 3 சூட்கேஸ்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

ஜெயலலிதாவும் சசிகலாவும் கொடநாடு வந்தபோது கனகராஜ்தான் இந்த சூட்கேஸ்களை அறைக்குள் கொண்டு வந்துள்ளார். இவற்றில் சுமார் 150 கோடி ரூபாய் அளவுக்கு பணம் இருந்திருக்கலாம் என்கிறார்கள். பணம் தவிர விலை உயர்ந்த நகைகளும் இருந்ததாம். ஆனால் கணக்கில் வாட்ச்களை மட்டுமே காட்டுகிறார்கள்.
எனவே சசிகலாவை அழைத்து வந்து விசாரித்தால்தான் உண்மையில் கொள்ளை போனது என்னென்ன என்பது தெரிய வரும். விரைவில் சசிகலாவை அழைத்துவந்து டீடெய்லாக விசாரிக்கவிருக்கிறதாம் காவல்துறை.












Click it and Unblock the Notifications