ஐஎஸ் தீவிரவாதிகளுடன் முகநூலில் பேசியது ஏன்? கோவையில் கைதான நபர்களிடம் தொடர் விசாரணை
கோவை: ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் கேரளா, கோவை இளைஞர்கள் 11 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 4வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் ஐஎஸ் இயக்க ஆதாரவாளர்களுடன் கலந்துரையாடியது உட்பட சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேரை தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த ஞாயிற்று கிழமை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். அவர்கள் அபு பஷீர் என்பவர் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் என்பதால் கோவையை சேர்ந்த இளைஞர்களிடம் ஐஎஸ் இயக்கம் குறித்து பிரச்சாரம் செய்து ஆள்சேர்ப்பில் ஈடுபட முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதையத்து பஷீருக்கு நண்பர்களான உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த நவாஸ், நவாஸ்கான், ரகுமான் உள்ளிட்ட 11 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து 8 பேரிடமும், ரகசிய இடம் ஒன்றில் 3 பேரிடமும் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
3வது நாளாக நேற்றும் தொடர்ந்த விசாரணையில் முகநூல் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் ஐஎஸ் இயக்க ஆதாரவாளர்களுடன் கலந்துரையாடியது உட்பட சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் கொடுத்த தகவலின் படியே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ள அதிகாரிகள் தீவிரவாத இயக்கத்துடனான தொடர்பு குறித்து ஆதாரங்கள் கிடைத்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். 4வது நாளாக இன்றும் இவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதால் விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications