போலீஸ் கஸ்டடியில் பச்சமுத்துவிடம் கிடுக்குப் பிடி விசாரணை- மீண்டும் சிறையில் அடைப்பு!!
சென்னை: ரூ75 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்துவை இன்று கஸ்டடியில் வைத்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன் 5 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை தன்னுடைய லெட்டர் பேடில் எழுதி வைத்துவிட்டு கடந்த மே மாதம் 27-ந் தேதி மாயமானார். அவர் எங்கிருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.

மதன் மற்றும் அவரது கூட்டாளிகள் மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கியுள்ளனர். இதுதொடர்பாக மொத்தம் 112 பேர் கொடுத்துள்ள புகாரில் ரூ.75 கோடி மோசடி செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதன் எழுதியிருந்த கடிதத்தில் தான் வாங்கிய பணத்தை எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து பச்சமுத்து மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 26-ந் தேதி பச்சமுத்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி பச்சமுத்து தாக்கல் செய்த மனு சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட் நாளைக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
மாணவர்கள் அளித்த பண மோசடி குறித்தும், மாயமான மதன் குறித்தும் பச்சமுத்துவிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, பச்சமுத்துவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பிரகாஷ், பச்சமுத்துவை 1 நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.
இதன்படி இன்று காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பச்சமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மாயமான மதன் எங்கே இருக்கிறார்? என்பது உட்பட ஏராளமான கேள்விகள் பச்சமுத்துவிடம் கேட்கப்பட்டது. இதன் பின்னர் பச்சமுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications