இரவு நேரம்.. இளம் பெண்ணை வாட்ச் செய்து.. பின்னாடியே விரட்டிய இளைஞர்.. மிரண்ட மயிலாடுதுறை

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே இரவு நேரத்தில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை வாயை பொத்தி தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை விசாரணைக்கு பின் போலீசார் கைது செய்தனர்.

Recommended Video

    இரவு நேரம்.. இளம் பெண்ணை வாட்ச் செய்து.. பின்னாடியே விரட்டிய இளைஞர்.. மிரண்ட மயிலாடுதுறை - வீடியோ

    இளம் பெண் பல நாட்களாக நோட்டமிட்டு வந்த அரவிந்த்குமார், பின்தொடர்ந்து சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி ஜெ.ஜெ நகரில் வசிப்பவர் அரவிந்த்குமார் என்கிற ராம்குமார் (18). இவர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். . வீட்டில் இருந்த இளம்பெண்ணை (19) (பாதிக்கப்பட்ட பெண்) பலநாட்களாக நோட்டமிட்டு வந்தாராம்.

    தனியாக சென்ற பெண்

    தனியாக சென்ற பெண்

    இந்நிலையில், கடந்த 31-ஆம் தேதி இரவு அந்த பெண் தன் வீட்டிலிருந்து உறவினர் வீட்டு திருமணத்திற்கு தனியே நடந்து சென்றிருக்கிறார். அப்போது அரவிந்த்குமார் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

    பாலியல் பலாத்காரம்

    பாலியல் பலாத்காரம்

    திடீரென வாயை பொத்தி மிரட்டிய அருகில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்த இடத்திற்கு இழுத்துச் சென்றாராம். அங்கு இளம் பெண்ணை பலவந்தமாக இழுத்துப்போட்ட, கொன்றுவிடுவதாக மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டாராம்.

    போலீசில் புகார்

    போலீசில் புகார்

    இதில் பாதிக்கப்பட்ட பெண் தன் சகோதரியிடம் நடந்த சம்பவத்தைக்கூறி அழுதிருக்கிறார். இதுகுறித்து அப்பெண்ணின் சகோதரி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரவிந்த்குமார் என்ற ராம்குமார் மீது புகார் அளித்தார்.

    மகளிர் போலீசார் அதிரடி

    மகளிர் போலீசார் அதிரடி

    இதையடுத்து அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அரவிந்த்குமார் என்கிற ராம்குமாரை நேரில் அழைத்து விசாரித்தனர். விசாரணைக்கு பின் குற்றம் செய்தது உறுதியானதை அடுத்து அரவிந்த்குமார் (18) மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+