கொந்தளிப்பில் கதிராமங்கலம்.. போராடும் மக்களை தடியடி நடத்தி விரட்டிய போலீஸால் பதட்டம்
தஞ்சாவூர்: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஒரு மாதத்துக்கும் மேலாக கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், குழாயில் இருந்து எண்ணெய் கசியும் இடங்களில் புகை வருவதாகவும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரி கதிராமங்கலத்தை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கதிராமங்கலம் பகுதியை பார்வையிட ஓஎன்ஜிசி அதிகாரிகளுடன் வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷுடன் மக்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே அங்குள்ள வனத்துறை கோவில் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் திடீரென தீபிடித்தது. தீ மேலும் பரவாமல் இருக்க அங்கிருந்த போலீசார் பச்சை செடிகளை கொண்டு தீயை அணைத்தனர். தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications