ஓசூரில் சாலை மறியல்.. தமிழக லாரி ஓட்டுநர்கள் மீது போலீஸ் தடியடி
ஓசூர்: தமிழக கர்நாடக எல்லையான ஜூஜுவாடியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக லாரி ஓட்டுநர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஏராளமான வாகனங்கள் தீவைத்தும் கொளுத்தப்பட்டன.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் நிலவும் அசாதாரண சூழலால் தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக கர்நாடக எல்லையான ஜூஜூவாடியில் ஏராளமான தமிழக பதிவெண் கொண்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சரக்குகள் தேக்கமடைந்துள்ளதாக கூறியுள்ள தமிழக லாரி ஓட்டுநர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனால் கிருஷ்ணகிரி-பெங்களூரு நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலை கைவிடுமாறு அறிவுறுத்தினர். இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி லாரி ஓட்டுநர்களைக் கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications