நடிகர் கொலை வழக்கு: நடிகை கேரளாவில் பதுங்கல்- விரைந்தது தனிப்படை
நெல்லை: பாளையங்கோட்டையில் நடிகரை கொன்று புதைத்த விவகாரத்தில் தொடர்புடைய நடிகை கேரளாவில் பதுக்கியிருப்பதாக கிடைத்த தகவலால் தனிப்படையினர் கேரளா விரைந்துள்ளனர்.
நாங்குநேரி அருகேயுள்ள பரப்பாடியை சேர்ந்தவர் பீட்டர் பிரின்சோ. துணை நடிகரான இவர் பெங்களூரூவை சேர்ந்த ஸ்ரூதி சந்திரலேகா என்பவருடன் சென்னை மதுரவயலில் வசித்து வந்தார்.
இவர் துணை நடிகையாகவும், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பீட்டருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்த கோடிக்கணக்கான பணத்தை பறிக்க திட்டமிட்டார்.
பீட்டரின் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஜனவரி 16ம் தேதி மதுராவயலில் கொலை செய்து அவரது உடலை பாளையங்கோட்டை ஆசிர்வாத நகரில் புதைத்தார். இதில் கூலிப்படையாக செயல்பட்ட பாளை செட்டிகுளத்தை சேர்ந்த ஆனட்ராஜ், பீ்ட்டர் பிரின்சோவின் நண்பர்களான பாளை சாந்தி நகரை சேர்ந்த காந்திமதி நாதன், ரபீக் உஸ்மான், ஜான் பிரின்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள நடிகை ஸ்ரூதி சந்திரலேகா, பீ்ட்டரின் நண்பர்களான உமா சந்திரன், நிர்மல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ஸ்ருதி சந்திரலேகா, அவரது கள்ள காதலன் உமா சந்திரன், நிர்மல் ஆகியோர் கேரளா மாநிலம் கொச்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னை போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டதன் பேரில் இவர்கள் மூவரையும் கைது செய்ய தனிப்படையினர் கேரளா விரைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications