கதிராமங்கலத்தில் கலவரத்தை தூண்டியதே போலீஸ்தான்: பேராசிரியர் ஜெயராமன் பகீர் குற்றச்சாட்டு!
கதிராமங்கலத்தில் கலவரத்தை தூண்டியது போலீசார் தான் என பேராசிரியர் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை: கதிராமங்கலத்தில் கலவரத்தை தூண்டியது போலீசார் தான் என பேராசிரியர் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
பேராசிரியர் ஜெயராமன் கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தியதால் கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது தந்தை தங்கவேல் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதையடுத்து தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ஜெயராமனுக்கு வரும் 26 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் போலீஸ் பாதுகாப்புடன் மயிலாடுதுறை அழைத்து வரப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கதிராமங்கலத்தில் காந்திய வழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
நாகை மாவட்டத்தில் 110 இடங்களில் எண்ணெய் கிணறுகளை தோண்ட தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதை சுட்டிக்காட்டிய ஜெயராமன், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி பகுதிகள் பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அப்பகுதிகள் பாலைவனமாக மாறக் கூடிய அபாயம் இருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் கதிராமங்கலம் போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டியவர்களே காவல்துறையினர் தான் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications