வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தால் வெற்றிவேலை கைதுசெய்ய காவல்துறை திட்டம்?
டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலை கைதுசெய்ய காவல்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு டி.டி.வி ஆதரவாளர் வெற்றிவேல் வந்தால் அங்கு வைத்து அவரை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக, வழக்கு தொடரப்பட்டதை அடுத்து அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 21ம் தேதி நடைபெற இருந்த நிலையில், 19ம் தேதி காலை டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் சமயத்தில் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர் வெளியிட்ட வீடியோ தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவது போலாகும் என்று அ.தி.மு.க தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் விசாரணையை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும் அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வீடியோவால் சட்ட ஒழுங்கு பிரச்னை, தேர்தல் ஆணைய செயல்பாட்டில் குறுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்து உள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரை அடுத்து வெற்றிவேல் மீது ஐ.பி.சி 468,471,176,177,189 ஆகிய சட்ட பிரிவுகளின் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், கைதை எதிர்த்து வெற்றிவேல் தாக்கல் செய்து இருந்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கி உள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக கைது செய்தால் தேவையற்ற பிரச்னை வரும் என்பதால் காவல்துறை இரண்டு நாட்கள் அமைதி காத்தது. இந்நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெறுவதால், அங்கு வெற்றிவேல் வந்தால் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications