ஜல்லிக்கட்டு போராட்டம்.. மெரினாவில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு
சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு நேரில் வரவேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் மெரினா பீச்சில் போராட்டம் நடத்துவோரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சென்னை மெரினா பீச் பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை சுமார் 100 பேருடன் தொடங்கிய இப்போராட்டம் இப்போதுள்ள நிலைமையில் சுமார் 4000 என்ற அளவில் அதிகரித்துள்ளது. மின்சாரத்தை துண்டித்து சிவில் அமைப்புகள் அடாவடி செய்தாலும் கூட, செல்போன் டார்ச் மூலமாக போராட்டத்தை தொடருகிறார்கள். இதில் பெண்களும் சிலர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மெரினா பகுதியில், செல்போன் ஜாமர்கள் பொருத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸ் வாகனங்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. எனவே நள்ளிரவு நேரத்தில் போராட்டக்காரர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனரா என்ற கேள்விக்குறி எழுந்தது.
இருப்பினும் போராட்டக்குழுவின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது ஜல்லிக்கட்டு தொடர்பாக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று அறிக்கை வெளியிடுவார் என அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இருப்பினும் முதல்வர் அறிக்கையை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் அதுவரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications