For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நித்தியானந்தாவுக்கு கறுப்பு கொடி: தம்பதிக்கு போலீசார் அனுமதி மறுப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாமக்கல்: சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்ட அனுமதி கேட்ட தம்பதியருக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

நாமக்கல்லில் உள்ள மாதேஸ்வரன் என்பவரது வீட்டுக்கு, நேற்று காலை, 11 மணிக்கு நித்தியானந்தர், தனது சீடர்களுடன் சென்றார். அங்கு நடந்த 15 நிமிட பூஜையில் பங்கேற்று விட்டு கிளம்பினார்.

Police refuse couple against Nithyananda

நித்தியானந்தா, அங்கிருந்து திருச்செங்கோடு, , பள்ளிபாளையம் வழியாக ஈரோடு செல்வதாக கூறப்பட்டது. அதையடுத்து, அவரது சீடர்கள் ஆங்காங்கே அவருக்கு வரவேற்பு ஏற்பாடுகளை செய்தனர்.

திருச்செங்கோடுக்கு நித்தியானந்தர் வருவதை அறிந்த, செங்கோட்டுவேலு என்பவரும் அவரது மனைவி வசந்தி என்பவரும் திருச்செங்கோடு நகர காவல்நிலையத்துக்கு வந்து, நித்தியானந்தனுக்கு கறுப்புக்கொடி காட்ட அனுமதி கேட்டனர்.

இதற்கு போலீஸார் மறுத்ததுடன், நித்தியானந்தன் திருச்செங்கோடு நகரை விட்டு செல்லும் வரை தம்பதியர் இருவரையும் காவல் நிலையத்திலேயே தங்கவைத்து பிறகு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது போலீசார் அந்த தம்பதியினரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஆன்-லைனில் நித்தியானந்தர் பற்றிய தகவல்களை பரப்ப, கம்ப்யூட்டர் மூலமாக வேலை செய்த ஆர்டருக்கான பணம் தரவில்லை எனவும் செங்குட்டுவேலு, பெருமாள் என்ற இருவரிடம் இருந்து, லட்சக்கணக்கில் நித்தியானந்தர் மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

English summary
Tiruchengodu Police refused couple, show black flag to protest against controversial priest Nittiyananta .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X