குமரி: குழித்துறை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5,000 பேர் மீது வழக்குப் பதிவு
குழித்துறை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபப்ட்ட 5,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்: ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க வலியுறுத்தி 12 மணிநேரத்துக்கும் மேலாக குழித்துறை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்திய 5,000 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஓகியில் சிக்கிய மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. இதனால் கொந்தளித்துப் போன கன்னியாகுமரி கிராம மக்கள் குழித்துறை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கடந்த வியாழன்றி சுமார் 12 மணிநேரம் குழித்துறை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குழித்துறை மார்க்கமாக ரயில் சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன.
பின்னர் நள்ளிரவில் இந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து ரயில் சேவைகள் வழக்கம் போல இயங்கின. இந்த நிலையில் குழித்துறை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5,000 பேர் மீது இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட எம்.எல்.ஏக்கள் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார், பிரின்ஸ் மற்றும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுத் தலைவர் சுப. உதயகுமார் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. களியக்காவிளை மற்ற்ம் மார்த்தாண்டம் காவல்நிலையங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications