ஜல்லிக்கட்டு உரிமைப் போர்: அலங்காநல்லூரில் கைதான 40 பேர் மட்டுமே விடுதலை- தொடரும் பதற்றம்!!
ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்ட 35 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று காலையில் கைது செய்யப்பட்ட 240 பேரில் 5 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அலங்காநல்லூரில் பதற்றம் நீடித்து வருகிறது
அலங்காநல்லூர்: காளைகளை அவிழ்த்துவிட்டதாக கைது செய்யப்பட்ட 35 பேரை மட்டும் போலீசார் விடுதலை செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று விடிய விடிய போராட்டம் நடத்திய 240 பேரில் 5 பேரை மட்டுமே போலீசார் விடுதலை செய்துள்ளனர். இதனால் அலங்காநல்லூரில் பதற்றம் நிலவி வருகிறது.
பொங்கல் திருவிழாவின் போது, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி தர வேண்டும் என்று கோரி மாபெரும் போராட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்றது. இந்தப் போராட்டம் விடிய விடிய 21 மணி நேரம் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை, திருச்சி, புதுக்கோட்டை என தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து காளைகளை அவிழ்த்து விட்டதாக கைது செய்யப்பட்ட 35 பேரை மட்டும் போலீசார் விடுதலை செய்துள்ளனர். இன்று காலைவரை போராட்டம் நடத்திய 240 பேரை இன்னும் போலீசார் விடுதலை செய்யவில்லை. இதனால் அவர்களின் நிலை என்ன என்று அலங்காநல்லூரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
போலீசார் தரப்பில், கைது செய்யப்பட்ட அனைவரும் அவரவர்களின் சொந்த வீடுகளுக்கு திரும்பி செல்வதை உறுதி செய்தால் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களும், மறியலில் ஈடுபட்டுள்ளவர்களும், எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்களோ அதே இடத்தில் தான் அவர்களை கொண்டு வந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். இதனால் அலங்காநல்லூரில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட 240 பேரில் 5 பேரை போலீசார் விடுதலை செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications