சிவகங்கை காவல் நிலையத்தில் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை முயற்சி.. பின்னணியில் ஷாக் தகவல்.. என்ன நடந்தது?
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் காவல் நிலையத்தில் போலீஸ் எஸ்ஐ ஜான் பிரிட்டோ தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அவரது தற்கொலை முயற்சிக்கு பின்னணியில் உள்ள ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலை கிராமம் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் ஜான் பிரிட்டோ. இந்நிலையில் தான் ஜான் பிரிட்டோ இன்று காவல் நிலையத்தில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை அங்கு பணியில் இருந்த காவலர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள் ஜான் பிரிட்டோவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஜான் பிரிட்டோ ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது பற்றி விசாரிக்கப்பட்டது. இதில் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சாலை கிராமத்தில் நடந்த சட்டவிரோத மது விற்பனைக்கு ஜான் பிரிட்டோ உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் காரணமாக ஜான் பிரிட்டோவை எஸ்ஐ செல்வராஜ் பணியிடமாற்றம் செய்துள்ளார். அதாவது சாலை கிராமம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஜான் பிரிட்டோ ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications