ஜெ. டிரைவர் மர்ம மரணத்துக்கு எடப்பாடி தான் காரணம்.. கனகராஜ் அண்ணன் தனபால் பரபரப்பு புகார்
கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் அண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
நீலகிரி: ஜெயலலிதாவின் கார் டிரைவர் மர்ம மரணத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என விபத்தில் சிக்கி உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கடந்த 24-ஆம் தேதி கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளியான கிஷன்பகதூர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் ஏப்ரல் 28ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த சயன் ஏப்ரல் 29ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். இதில் சாயனின் மனைவியும், குழந்தையும் பலியாகினர்.
மேலும் ஓம் பகதூர் கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கனகராஜ் அண்ணன் தனபாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து சகோதரரிடம் விசாரணை நடைபெற்றது.
சுமார் 4 மணிநேர விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனகராஜ் அண்ணன் தனபால், கனகராஜ் மர்ம மரணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications