அப்பல்லோ வாசலில் அதிகாரிகள்.. புகார்களை விசாரிக்காத போலீஸ் ஸ்டேஷன்கள்.. சென்னை மக்களுக்கு சோதனை
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ மருத்துவமனையை சுற்றிலும் போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களால் அவர்களை அணுக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம்.
தி.நகரை சேர்ந்த மகாவீர்சந்த் தோகாவின் கதை இது. மோசடி வழக்கு தொடர்பாக புகார் அளிக்கபோனவரை அப்படியே திருப்பியனுப்பியுள்ளனர் போலீசார். காவல் நிலையத்தில் அதிகாரிகள் இல்லை; முதல்வர் பந்தோபஸ்துக்காக அப்பல்லோவில் அவர்கள் உள்ளனர் என பதில் வந்துள்ளது. அலைந்து பார்த்து சோர்வடைந்த மகாவீர்சந்த், இறுதியாக கமிஷனர் அலுவலகத்திற்கே சென்று புகார் கொடுத்துள்ளார்.

அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஜெயந்தி ஹார்வே நிலைமை இன்னும் மோசம். கொள்ளையர்கள் வீடு புகுந்து பொருட்களை திருடிச் சென்ற நிலையிலும், இவரது புகாரை கேட்க சீனியர் அதிகாரிகள் போலீஸ் ஸ்டேஷனில் இல்லையாம். கேட்டால், அண்ணா நகர் போலீசாரும், அப்பல்லோவை நோக்கியே கைகாட்டுகிறார்களாம்.
இது ஏதோ, தி.நகரிலும், அண்ணா நகரிலும் மட்டும் நடந்த சம்பவங்கள் அல்ல. மொத்த தலைநகரிலும் குடிமக்கள் நிலைமை இதுவாகத்தான் உள்ளதாம். ஒன்று புகார் வாங்கப்படுவதில்லை, புகார் வாங்கினாலும் காவல்துறை செயல்படுவதில்லை, செயல்பட தூண்டுவதற்காக அதிகாரிகளை சந்திக்க முயன்றாலும் மக்களால் அது முடிவதில்லை.
சென்னையின் அனைத்து துணை கமிஷனர்களும் (டிசிபி), அப்பல்லோவை சுற்றிலும் தினமும் ஆஜராக கட்டளையாம். டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications