ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் மீது போலீஸ் தடியடி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் இயக்குநர் கவுதமன் படுகாயமடைந்தார்.
மதுரை : ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமனை காவல்துறையினர் விரட்டி விரட்டி தடியால் அடித்தனர். அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலீசார் கைது செய்தனர்.
பொங்கல் திருநாளன இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இயக்குநர் கவுதமன், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் சேர்ந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது அவர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர் இயக்குநர் கவுதமன் உட்பட அனைவர் மீதும் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர்.
இயக்குநர் கவுதமனை விரட்டி விரட்டி காவல்துறையினர் தடியால் தாக்கினர். மேலும் அவரை தரதரவென சட்டையை பிடித்து இழுத்துச்சென்றனர்.
அவனியாபுரத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழ் ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications