விதவைப் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை - கூடங்குளம் அருகே போலீஸ்காரர் கைது
நெல்லை: கூடங்குளம் அருகே விதவைப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தந்த போலீஸ்காரர் கைது செய்யப் பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆவரைகுளத்தை சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி உஷா (31). கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணியாற்றி வந்த முருகேசன் சமீபத்தில் மரணமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து கணவர் இறந்ததற்கான பணப்பலன்களைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார் உஷா. அப்போது அவருக்கு தேவையான உதவிகளை ஆவரைகுளத்தை சேர்ந்தவரும் சங்கரன்கோவில் திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் முருகேசன் (46) என்பவர் செய்து வந்துள்ளார்.

உஷாவை கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு அழைத்துசெல்வது, தாலுகா அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ் பெற்று கொடுப்பது என தனது சொந்த செலவில் பல்வேறு உதவிகளை உஷாவிற்கு செய்து வந்துள்ளார் முருகேஷன்.
இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட முருகேஷன், உஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தன் ஆசைக்கு இணங்குமாறு அவர் உஷாவை வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு உஷா மறுத்து விடவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, முருகேசன் உஷாவிடம், ‘நான் உனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவேன்' என மிரட்டியுள்ளார். மேலும் இதுவரை தான் செலவு செய்த பணத்தையும் திரும்ப கேட்டு உஷாவை அவர் நச்சரித்துள்ளார்.
முருகேஷனின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, இது குறித்து உஷா கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து முருகேசன் மீது பணம் கேட்டு மிரட்டியது, பெண் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications