முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன தலைவர்கள்- அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட லிஸ்ட்!
முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவர்கள் பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை: தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி
சிபிஎம் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
பாமக சட்டசபை குழு தலைவர் ஜிகே மணி
மநீம கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன்
நடிகர் ரஜினிகாந்த்
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆந்திரா முதல்வ ஜெகன் மோகன் ரெட்டி
கேரளா அமைச்சர் சிவன்குட்டி
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நடிகை காயத்ரி ரகுராம்
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்:
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, தமிழ்நாடு இடதுசாரித் தலைவர்கள் இரா.நல்லகண்ணு, பாலகிருஷ்ணன், முத்தரசன்

மதிமுக பொதுச்செயலர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தவாக தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கவிஞர் வைரமுத்து, திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி












Click it and Unblock the Notifications