தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்திலிருந்தா?... சாருஹாசனை ஓங்கிக் கண்டித்த ஒன்இந்தியா வாசகர்கள்
தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகாவை சேர்ந்தவர்தான் என்ற சாருஹாசனின் கருத்திற்கு ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகாவை சேர்ந்தவர்தான் என்ற சாருஹாசனின் கருத்திற்கு மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாருஹாசனின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து ஒன்இந்தியா வாசகர்களிடம் கேட்டபோது பலரும் அவரது கருத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என நடிகர் சாருஹாசன் கூறி இருந்தார். அவர் ரஜினியை மறைமுகமாக குறிப்பிட்டது எல்லோராலும் யூகிக்க முடிந்தது.
படு பச்சையாக தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று சாருஹாசன் கூறியது தமிழக மக்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்ப்பதாக உள்ளது. இதுகுறித்து நமது வாசகர்களிடம் கேள்வி கேட்டிருந்தோம்.

கோபம்
பெருமளவிலான வாசகர்கள் ''இதை விட தமிழர்களை கேவலப்படுத்த முடியாது'' என்று கூறியுள்ளனர் மொத்தமாக 30.27% பேர் 'இதை விட தமிழர்களை கேவலப்படுத்த முடியாது என்ற பதிலை தேர்வு செய்துள்ளனர்.

நிதர்சனமான பேச்சு
அதேசமயம், கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 17.57% பேர், நிதர்சனத்தைத்தான் பேசுகிறார் சாருஹாசன் என்ற பதிலைத் தேர்வு செய்து வாக்களித்துள்ளனர்.

அடிமைகளாக இருந்தால் இப்படி நடக்கும்
சிலர் இந்த கருத்து பற்றி வேறு விதத்தில் கோபமாக வாக்களித்துள்ளார்கள். தமிழர்கள் அடிமைகளாக இருந்தால் இதுதான் நடக்கும் என்று 22.62% மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

நடக்காது
தமிழர்கள் இந்த முறை சுதாரிப்பாக இருப்பார்கள் என்ற பதிலுக்கு வாக்களித்தோர் மொத்தம் 13.24% வாசகர்கள் ஆவர். முன்பு போல முட்டாளாக தமிழ்நாடு இருக்காது என்ற உணர்வை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

பார்க்கலாம்
சிலர் இப்பொழுது எதையும் சொல்ல முடியாது தேர்தலின் போது பார்த்துக் கொள்ளலாம் என்றுள்ளனர். அதாவது 16.31% பொறுத்திருந்துதான் பார்ப்போமே என்ற பதிலுக்கு வாக்களித்துள்ளார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications