பொள்ளாச்சி லோக்சபா தொகுதி: 'தென்னை' தேசத்தில் மரமேறி கொடிநாட்டப் போவது திமுகவா? அதிமுகவா?
பொள்ளாச்சி: தமிழ்நாட்டில் அதிமுக 7 முறை வென்ற தொகுதிகளில் ஒன்று பொள்ளாச்சி. திராவிட கட்சிகளான திமுக, அதிமுக, மதிமுக 3-ம் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்ட தொகுதி என்பதால் திமுகவா? அதிமுகவா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வால்பாறை (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம். 1977-ம் ஆண்டு முதல் தனித் தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்பின் பின் பொதுத் தொகுதியானது.

பொள்ளாச்சி லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 15,81,795; ஆண்கள்-7,66,077; பெண்கள் 68,15,428; 3-ம் பாலினம்-290.
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
கே. சுகுமார்(அதிமுக) 3,05,935
சண்முகசுந்தரம்(திமுக) 2,59,910
பெஸ்ட் இராமசாமி(கொமுபே) 1,03,004
கே. பி. தங்கவேல்(தேமுதிக) 38,824
வி. எஸ். பாபா இரமேஷ்(பாஜக) 16,815
இ. உமர்(மனிதநேய மக்கள் கட்சி) 13,933
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
சி. மகேந்திரன்(அதிமுக) 4,17,092
ஈஸ்வரன்(கொ.ம.தே.க) 2,76,118
பொங்கலூர் ந. பழனிசாமி (திமுக) 2,51,829
கே. செல்வராஜ் (காங்கிரஸ்) 30,014
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
சண்முகசுந்தரம்(திமுக) 5,54,230
மகேந்திரன் (அதிமுக) 3,78,347
மூகாம்பிகை(மக்கள் நீதி மய்யம் 59,693)
எஸ். முத்துக்குமார்(அமமுக) 26,663
சனுஜா(நாம் தமிழர் கட்சி) 31,483
2024-ம் ஆண்டு களம் காணும் வேட்பாளர்கள்
ஈஸ்வர சுவாமி (திமுக)
கார்த்திகேயன் (அதிமுக)
வசந்தராஜன் (பாஜக)
சுரேஷ்குமார் (நாம் தமிழர் கட்சி)
பொள்ளாச்சி தொகுதி நிலவரம் என்ன?: தென்னை, நிலக்கடலை, காய்கறிகள், தேயிலை சாகுபடி பிரதானம். தென்னை சாகுபடியில் தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கும் தொகுதி. தென்னை சார் தொழில்கள் நிறைந்த பகுதி. தென்னை சார் தொழில்துறை குறித்த ஏராளமான கோரிக்கைகள் கிடப்பில் கிடக்கின்றன. பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக 7 முறை வென்ற தொகுதி. மதிமுக 2 முறை வென்றுள்ளது. திமுக 3 முறை வென்றுள்ளது. திராவிட கட்சிகளான திமுக, அதிமுக, மதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள தொகுதி. காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது. மதிமுக, சற்று வாக்கு வங்கி அதிகமாக இருக்கும் தொகுதிகளில் பொள்ளாச்சியும் ஒன்று.












Click it and Unblock the Notifications