இயந்திர கோளாறு- நாகையில் வாக்குப்பதிவு பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவில் காலதாமதம் ஏற்பட்டது.
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 1425 வாக்குச்சாவடிகள் உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1081 வாக்குச் சாவடிகள் உள்ளன.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு அமைதியாகத் துவங்கியது. திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு 20 நிமிடங்கள் தாமதமாகத் துவங்கியது.
பழைய வலம் வாக்குச் சாவடியில் ஒன்றே முக்கால் மணி நேரம் தாமதமாகத் துவங்கியது.












Click it and Unblock the Notifications