மக்களுக்கு அரசியல் மேலே எவ்ளோ விரக்தி பாருங்க... இதோ ஒரு சுவாரஸ்ய கருத்து கணிப்பு முடிவுகள்
மக்களுக்கு அரசியல் மேலே எவ்ளோ விரக்தின்னு இந்த கருத்து கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.
சென்னை: தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்பதற்கு மக்கள் படு சுவாரஸ்யமாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா செயல்பட்டு கொண்டிருந்தவரை அவர்களுக்கு மாற்று என்ற கேள்விக்கே இடமில்லாமல் போய்விட்டது. ஆனால் தற்போது கருணாநிதியால் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இல்லை.
இதனால் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நான் தான் நிரம்புவேன் என்று ரஜினியும் கமலும் வந்துள்ளனர். இதுபோல் ஸ்டாலினும் வெற்றிடம் இல்லை என்கிறார். எடப்பாடியும் இதையேதான் கூறுகிறார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களால் மக்கள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.

வெள்ளைக்காரன்
இதனால் ஒன் இந்தியா தமிழ் தளம் சார்பில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் அடுத்த தமிழக முதல்வராக யார் வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? எந்று கேள்வி எழுப்பப்பட்டது. இதில் நல்லதொரு அரசியல்வாதி, வேறு துறையிலிருந்து ஒருவர் வரட்டும், சினிமாக்காரர்கள் வரக் கூடாது, இப்போது உள்ள தலைவர்களில் ஒருவர், புதிய தலைவர்கள் வரட்டும், மாணவர்கள், இளைஞர்களிடம் ஒப்படைப்போம் அதிகாரத்தை, நல்லக்கண்ணு போன்றோரை அமர வைப்போம், பெரிய குழப்பமா இருக்கே. யாரும் வேணாம், பேசாம வெள்ளைக்காரனிடமே ஒப்படைச்சுருவோம் என்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன.

எந்த அளவுக்கு...
இதில் யாருமே வேணாம், பேசாம வெள்ளைக்காரனிடமே ஒப்படைச்சுருவோம் என்று கருத்தை 27.84 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதாவது தற்போதைய ஆட்சியாளர்களை காட்டிலும் வெள்ளைக்காரனே தேவலாம் என மக்கள் நினைத்து விட்டார்கள். அப்படியென்றால் மக்களுக்கு எந்த அளவுக்கு அரசு மீது அதிருப்தி என்பதை நம்மால் காண முடிகிறது.

புதிய தலைவர்கள்
அடுத்த இடத்தில் நல்லகண்ணு போன்றோரை அமர வைக்கலாம் என்ற கருத்தை 9.18 சதவீதம் பேர் பதிவு செய்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லகண்ணு இந்த மாநிலத்தின் முதல்வரானால் ஊழல் ஒழிந்துவிடும் என்பது மக்களின் நியாயமான நம்பிக்கை. அதுபோல் மூன்றாவது இடத்தில் நல்லதொரு அரசியல்வாதி வரவேண்டும் என்றும் 4-ஆவது இடத்தில் புதிய தலைவர்கள் வரட்டும் என்பதும் மக்களின் விருப்பமாக உள்ளது.

முழு நேர அரசியல்
இளைஞர்கள் கையில் இந்தியா என்ற கூற்றுக்கேற்ப, ஆட்சி, அதிகாரத்தை மாணவர்கள், இளைஞர்களிடம் ஒப்படைப்போம் என்று 9.18 சதவீதம் பேர் கூறியுள்ளனர். ரஜினி கட்சி தொடங்காவிட்டாலும் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார், அதுபோல் கமல் கட்சி தொடங்கிவிட்டாலும் முழு நேர அரசியலில் இன்னும் ஈடுபடவில்லை, இந்த சூழலில் சினிமாக்காரர்கள் முதல்வராக வரக் கூடாது என்று 7.21 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications