துப்பாக்கி முனையில் சிலை கடத்தல் கும்பலைப் பிடித்த 'கறார்' அதிகாரி' பொன். மாணிக்கவேல் திடீர் மாற்றம்
தமது பணி காலத்தில் சிலை கடத்தலை முழுமையாக தடுத்த பொன். மாணிக்கவேல் தற்போது ரயில்வேக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை: சிலை கடத்தல் தடுப்பு ஐஜியாக இருந்த பொன். மாணிக்கவேல் தற்போது ரயில்வே ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கறார் போலீஸ் அதிகாரி என அழைக்கப்படுவோரில் பொன். மாணிக்கவேலும் ஒருவர். 1989-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான பொன். மாணிக்வேல், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்.பி.யாக இருந்தபோது கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் போலீஸ் என்றும் பார்க்காமல் நடுத்தெருவிலேயே அடித்து துவைத்தவர். சேலத்தில் எஸ்பியாக இருந்த போது ஓமலூர் போலீஸ்காரர் மணிரத்னத்தால் பிரச்சனைகளை எதிர்கொண்டார் பொன். மாணிக்கவேல்.
அப்போது கொலை வழக்கை பொன். மாணிக்கவேல் விசாரித்த கோணத்தை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் பாராட்டியும் இருந்தது. உளவுத்துறை டிஐஜியாகவும் பொன். மாணிக்கவேல் பணியாற்றினார்.

தீனதயாளன் கும்பல்
சிலை கடத்தல் தடுப்பு ஐஜியாக பொறுப்பேற்றது முதல் சிலை கடத்தல் கும்பலின் கொட்டத்தை ஒடுக்கினார் பொன். மாணிக்கவேல். சிலை கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட தீனதயாளனையும் கூட்டாளிகளையும் கூண்டோடு தூக்கினார் பொன். மாணிக்கவேல். கடலூரில் சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் சிலை கடத்தல் கும்பலை சேஸ் செய்து பிடித்தார்.

குடைச்சல்
அதிரடியான நடவடிக்கைகளால் போலீஸ் அதிகாரிகள் பலருக்கும் பொன். மாணிக்கவேலை சிக்க வைக்க தொடர்ந்து முயற்சித்தனர். இதில் அவர் எதிர்கொண்ட சோதனைகள் எராளமானது.

மருத்துவ விடுப்பு
உதாரணமாக 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டிருந்தார். அந்த பயணத்தின் போது பழமையான நடராஜர் மற்றும் அர்த்தநாரீஸ்வர் சிலைகள், மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலைகள் டெல்லியில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட போது பொன்.மாணிக்கவேல் பணியில் இல்லை. அவர் மருத்துவ விடுப்பில் செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருந்தார் என்ற சர்ச்சை ஏற்பட்டது.

போலீஸ் கைது
கடந்த வாரம் பழங்கால சிலைகளை கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்த கோயம்பேடு போலீஸ் அதிகாரி சுப்புராஜை கைது செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்றுதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன். மாணிகக்வேல் ஆஜராகி இருந்தார். இந்நிலையில்தான் அவர் திடீரென ரயில்வே துறைக்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.
-
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications