நவோதயாவுக்கு அனுமதி இல்லைன்னா தனியார் பள்ளிகளையும் மூடுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் ஒரே போடு!
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கவில்லை என்றால் தனியார் பள்ளிகளையும் மூட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கவில்லை என்றால் தனியார் பள்ளிகளையும் மூட வேண்டும் என்று மத்திய இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பாமக முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது :டெங்கு பாதிப்பில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டெங்குவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். டெங்குக்கு சரியான மருந்து கொடுக்க வேண்டும். காலம் தாழ்ந்த முனைப்பாக அரசின் செயல்பாடு இருக்கிறது.

தவறு இல்லை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே நவோதயா பள்ளிகளை கொண்டு வருவதில் தவறு இல்லை என்று சொன்னார். நவோதயா பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றால் தமிழக மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.

யோக்கியதை இருக்கிறதா?
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை என்றால் தனியார் பள்ளிகளை மூடிவிடுங்கள். நவோதயா பள்ளிகளுக்கு நிகராக பள்ளிகளை தமிழகத்தில் திறக்க அரசு சொல்லட்டும். அதைச் சொல்ல திமுக அதிமுகவிற்கு யோக்கியதை இருக்கிறதா?

உண்மையில்லை
ஜெயலலிதா இருந்த போதும் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு தான் ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்தப்படுவதாக சொல்வதில் உண்மையில்லை.

மக்கள் பிரச்னை
அரசியலுக்கு வருகிறவர்கள் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும். சினிமாப் புகழை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வரலாம் ஆனால் அவர் மக்கள் பிரச்னைக்கான செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications