500 டாஸ்மாக் கடைகள் மூடல்.. ஜெ.வுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு
நாகர்கோவில்: தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் மதுக் கடைகளை மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளது பாராட்டுக்குரியது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, 500 டாஸ்மாக் மதுக் கடைகளை இன்று முதல் மூட உத்தரவிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாராட்டுக்குரியது. அதேசமயம் பூரண மதுவிலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவது மட்டுமின்றி மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் கோவில்களில் திருடப்பட்ட நூற்றுக்கணக்கான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவில்களில் உள்ள சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட பழமையான சிலைகளா? அல்லது மாற்று சிலைகளா? என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
கேரள முதல்வராக பினராய் விஜயன் பதவியேற்றதும் முல்லை பெரியாறு அணை பிரச்சனை குறித்து கூறிய கருத்துக்கு பாராட்டு தெரிவித்தோம். தற்போது அவர் தனது கருத்தை மாற்றி கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் பேசி நல்ல தீர்வு காண வேண்டும். அணையை பலப்படுத்தி விட்டு தண்ணீரை முழு கொள்ளளவு ஏற்றினால் தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு கேரள முதல்வர் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications